கன்னி ராசி அன்பர்கள், இன்று உங்கள் பேச்சு, செயலில் தடுமாற்றம் ஏற்படலாம், நண்பனின் வழிகாட்டுதல் நன்மையை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி உண்டாகும், பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். நேரத்திற்கு உண்பதால் ஆரோக்கியம் சீராக இருக்கும். இன்று பிறருடன் பழகும் போது நிதானம் இருக்கட்டும்.
இன்று தொழில் முன்னேற்றம் காணப்படும், பொருளாதார முன்னேற்றமும் இருக்கும், பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகத்தை கொடுக்கும். இன்று எந்த ஒரு விஷயத்தையும் தெளிவாகவும் சுய சிந்தனையுடன் செய்வீர்கள், அதனால் சாதகமான பலனைப் பெறுவீர்கள். புதிதாக, வீடு, மனை வாங்கப் போட்ட திட்டங்கள் இன்று சிறப்பை கொடுப்பதாக அமையும்.
சில விஷியங்களை செய்யும்போது மட்டும் யோசனையுடன் செய்யுங்கள், அது போதும் உங்களுடைய பொருட்களை மிகவும் கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் இளம்பச்சை