சென்னை விமான நிலையத்தில் மண் காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சியானது நடைபெற்றது.
சென்னை மாவட்டத்திலுள்ள மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உலக பூமி தினத்தையொட்டி ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு தொடங்கியுள்ள முன் காப்போம் இயக்கம் சார்பாக மண்ணோடு தொடர்பில் இருங்கள் என்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடன இயக்குனர் கலா, பாலாஜி முருகதாஸ் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மண்ணை காப்பது சார்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இதில் விழிப்புணர்வு நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது.
நிகழ்ச்சியின்போது நடன இயக்குனர் கலா கூறியுள்ளதாவது, “பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல விஷயங்கள் பற்றிப் பேசுகின்றோம். ஆனால் மண் குறித்து நாம் பேசுவதில்லை. மண் கோடான கோடி உயிர்களை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றது. நாம் மண் ஊட்டசக்தியை குறைத்து வருகின்றோம். விவசாயம் நன்றாக இருக்க வேண்டும் என மண்ணில் ரசாயனத்தை போடுவதனால் மண் கெட்டு விடுகின்றது. மண் நல்லா இருந்தால் தான் மனிதன் ஆரோக்கியமாக இருக்க முடியும்” என பேசியுள்ளார்.