Categories
மாநில செய்திகள்

2 1/2 வயது மகனை கொன்று தாயும் தற்கொலை…. மனதை உலுக்கும் சம்பவம்…..!!!!!

செங்கல்பட்டு கல்பாக்கம் அடுத்த நெய்குப்பி பகுதியில் பூபதி (40) என்பவர் வசித்து வருகிறார். இவர் பில்டிங் கான்ட்ராக்டர் ஆவார். இவருடைய மனைவி கோடீஸ்வரி (32) ஆவார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் மற்றும் 2 1/2 வயதில் 1 மகன் இருக்கின்றனர். இதில் மகன் அரிகரசுதன் “ஆர்டிசம்” நோயால் பாதிக்கப்பட்டு வாய்பேச முடியாமல் உள்ளதால், அவருக்கு ஆக்குபேஷன் தெரபி சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது. எனினும் மகனின் மருத்துவ சிகிச்சையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் தாய் கோடீஸ்வரி மனஉளச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் தன் 2 1/2வயது மகனை தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கடித்து கொன்றுவிட்டு, கோடீஸ்வரியும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த சதுரங்கபட்டினம் காவல்துறையினர் இருஉடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கோடீஸ்வரியின் சகோதரர் ரமேஷ் என்பவர் இருவரின் சாவில் சந்தேகம் உள்ளதாக போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதனை தொடர்ந்து கோடீஸ்வரியின் கணவர் பூபதி மற்றும் அவரது உறவினர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |