Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சென்னையில் உள்ள கிண்டியில் நட்சத்திர விடுதி அமைந்துள்ளது. இங்கு இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் யங் இந்தியன்ஸின் சார்பில் தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்க உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். இவர் நிகழ்ச்சி முடிந்ததும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் எந்த குழந்தையும் மண்ணில் பிறக்கும் போது நல்ல குழந்தையாகத்தான் பிறக்கிறது. ஆனால் அந்த குழந்தை நல்லவராவதும் தீயவராவதும் அன்னையின் வளர்ப்பில் உள்ளது என்றார்.

அதன்பிறகு மாணவர்களுக்கு பள்ளிகளிலும் கவுன்சிலிங் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களை ஆசிரியர்கள் தங்களுடைய குழந்தைகளாக எண்ணி அவர்களை நல்ல பாதையில் கொண்டு செல்ல வேண்டும். ஆனால் ஆசிரியர்கள் மாணவர்களை தாக்குவது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. நான் 2 குழந்தைகளாக தந்தையாக இருக்கிறேன் என்பதை நினைக்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. மேலும் பள்ளிகளில் பாடத் திட்டங்களை மாற்றம் செய்யும் போது டிஜிட்டல் தொழில்நுட்பத்தை கருத்தில் கொண்டு அதற்கு தகுந்தார்போல் மாற்றம் செய்யப்படும் என்றார் ‌

Categories

Tech |