Categories
மாநில செய்திகள்

பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினரின் பேட்டி…. அதிர்ச்சியில் தி.மு.க தொண்டர்கள்…!!!!

பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினரின் பேட்டி தி.மு.க தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள காருகுறிச்சி கிராமத்தில் நாதஸ்வர இசைக்கலைஞர் அருணாச்சலத்தின் சிலைக்கு பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன்பிறகு நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் தமிழகத்தில் தேவையான அளவு நிலக்கரி இருப்பு வைக்காமல் இருப்பதே அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதற்கு காரணம் என்றார். தற்போது தமிழகத்தை ஆளும் கட்சியினர் எந்த ஒரு திட்டமும் இல்லாமல் இருக்கின்றனர். தமிழகத்தில் ஆட்சி செய்யும் அரசு எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை கூறிக் கொண்டே இருக்கிறது. அதைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை.

திருநெல்வேலி மாவட்டத்தில் போதைப் பொருட்களின் விற்பனை அதிக அளவில் நடைபெறுகிறது. இது மாதிரியான சட்டவிரோத செயல்களை தடுப்பதற்கான உரிய நடவடிக்கைகளை காவல்துறையினர் எடுக்க வேண்டும். அதன்பிறகு காவல் உதவி ஆய்வாளர்  தாக்கப்பட்ட சம்பவம் வருந்தத்தக்கதாகும். தற்போது பொதுமக்கள் காவல்துறையினரை  தாக்க துணிந்துவிட்டனர். இந்த தாக்குதல் முயற்சியில் கட்டாயம் ஆளும் கட்சியின் பின்னணி இருக்கிறதா என்பதை காவல துறையினர் விசாரிக்க வேண்டும் என்றார். மேலும் நயினார் நாகேந்திரன் இந்த பேட்டி தி.மு.க தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Categories

Tech |