ரஷ்யா, உக்ரைன் மீது தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக ரஷ்ய படைகள் உக்ரைன் நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களை ஆக்கிரமித்துள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக உக்ரைன் வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இருப்பினும் உக்ரைன், ரஷ்ய படைகளின் தாக்குதலால் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. இந்த நிலையில் யூடியூப், உக்ரைனில் நடக்கும் போர் குறித்த காட்சிகளை நீக்காமல் விட்டதற்காக மாஸ்கோ நீதிமன்றம் கூகுளுக்கு ரூ. 1 கோடி அபராதம் விதித்துள்ளது.