ஒரே நேரத்தில் அக்காள், தம்பி 2 பேரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே ஓடப்பன்குப்பம் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளியாக வேலைப்பார்த்து வருகிறார். இவர்களுக்கு அனிஷா (12), சுரேஷ் (10) என்ற 2 குழந்தைகள் இருந்துள்ளனர். இவர்கள் 2 பேரும் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்த ஆடுகளை மேய்ப்பதற்காக சென்றுள்ளனர். அங்கிருந்த ஒரு குளத்திற்குள் சுரேஷ் இறங்கியுள்ளான். அப்போது எதிர்பாராதவிதமாக சுரேஷ் குளத்திற்குள் மூழ்கியுள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அனிஷா தம்பியை மீட்பதற்காக குளத்திற்குள் இறங்கியுள்ளார். ஆனால் அனிஷாவும் குளத்திற்கு ஒரு மூழ்கி விட்டார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் குழந்தைகள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக முத்தாண்டிக்குப்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.