Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. சிறப்பாக நடைபெற்ற தேர்த்திருவிழா….. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

பிரசித்தி பெற்ற கோவிலின் தேர்த்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே புகழ்பெற்ற பச்சைவாழி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.

இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அதன்பிறகு தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் இந்த திருவிழாவில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுப்பதற்காக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்

Categories

Tech |