Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சனை” பெண்ணின் விபரீத முடிவு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மகாராஜபுரம் பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயமாலினி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் ஜெயமாலினிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் மன உளைச்சலில் இருந்த ஜெயமாலினி கடந்த 20-ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஜெயமாலினியின் சகோதரர் கேசவன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |