Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஆட்டோ மீது கார் மோதல்…. கோர விபத்தில் ஓட்டுநருக்கு படுகாயம்….. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!!

பயங்கர விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள  தட்டக்கொல்லி பகுதியில் யூசுப் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான ஆட்டோவில் தொரப்பள்ளி பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வேகமாக வந்த கார் ஆட்டோவின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கூடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு ஆட்டோ ஓட்டுநருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் கூடலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |