Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நடந்து சென்று கொண்டிருந்த மாமியார்…. கட்டையால் தாக்கிய மருமகள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

மாமியாரை தாக்கிய மருமகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குப்பநாயக்கன்பட்டி பகுதியில் மயில்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு உதயகுமார் என்ற மகன் உள்ளார். இவருக்கு தவமணி என்ற மனைவி உள்ளார். இவர்கள் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். மேலும் மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே அடிக்கடி குடும்பப் பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் ஈஸ்வரி அதிகாலையில் இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். அப்போது மருமகள் தவமணி மாமியார் ஈஸ்வரியின் பின்னால் சென்று தான் மறைத்து வைத்திருந்த கட்டையால் தலையில் பலமாக தாக்கியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த ஈஸ்வரி அலறி துடித்துள்ளார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு மயில்சாமி உடனடியாக வெளியே வந்து கீழே கிடந்த ஈஸ்வரியை மீட்டு கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். அங்கு ஈஸ்வரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் குடும்ப பிரச்சினை காரணமாக மருமகள் மாமியாரை கட்டையால் தாக்கிய தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தவமணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |