நிலைத்தடுமாறி லாரி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் இருந்து சென்னையை நோக்கி ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி உளுந்தூர்பேட்டை அருகே சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் லாரி நிலைத்தடுமாறி சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரின் மீது பலமாக மோதியது.
இந்த விபத்தில் லாரியின் முன் பக்கம் சேதமடைந்தது. ஆனால் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். இதுகுறித்த புகாரின்பேரில் உளுந்தூர்பேட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.