தி வாரியர் திரைப்படத்தின் முதல் பாடலான சிம்புவின் குரலில் உருவாகியிருக்கும் புல்லட் பாடலை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி வரும் தி வாரியர் என்ற திரைப்படத்தை லிங்குசாமி இயக்குகின்றார். படத்திற்கு ஹீரோவாக ராம் பொத்தினேனி நடிக்க ஹீரோயினாக கீர்த்தி ஷெட்டி நடிக்கின்றார். இத்திரைப்படத்தை சீனிவாச சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கின்றது.
வருகின்ற ஜூலை 14-ஆம் தேதி இத்திரைப்படமானது ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தப்படத்தில் நாசர், ஆதி, நதியா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இத்திரைப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைகின்றார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் நடிகர் சிம்பு பாடல் ஒன்றை பாடி இருக்கின்றார்.
இந்நிலையில் படத்தின் முதல் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியானது சென்னையில் உள்ள பிரபல மாலில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பாடலை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த பதிவில் கூறியுள்ளதாவது, இயக்குனர் லிங்குசாமி சார் இயக்கத்தில் தேவிஸ்ரீ பிரசாத் இசையில் தமிழ் தெலுங்கில் தயாராகும் தி வாரியர் படத்தின் லிரிகல் வீடியோவை இன்று வெளியிட்டோம். இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் நடிகர் ராம் பொத்தினேனி அவர்களுக்கு வாழ்த்துக்கள்” என கூறியுள்ளார்.