Categories
தேசிய செய்திகள்

ரூ.12 கேரி பேக்…. ரூ.21,000 நஷ்டஈடு…. நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு……!!!!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சீபனா ராமா ராவ் என்பவர் வசித்து வருகிறார். இவர் துணிக்கடை ஒன்றில் ரூ.600 மதிப்புள்ள துணியை வாங்கினார். இதையடுத்து அதற்கான கட்டணச்சீட்டில் கேரி பேக்கிற்கு ரூ.12 வசூலிக்கப்பட்டதை சட்டவிரோதம் என்று சீபனா கடையில் உள்ள மேலாளரிடம் தெரிவித்துள்ளார்.

அதற்கு கடையில் இருந்த மேலாளர் கோபமாக பேசி உள்ளார். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இது குறித்த வழக்கை விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம் ரூபாய்.21,000 நஷ்ட ஈடையும், ரூபாய். 1,500 வழக்கு செலவுத் தொகையையும் வாடிக்கையாளருக்கு துணிக்கடை தரப்பிலிருந்து கொடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories

Tech |