Categories
உலக செய்திகள்

இலங்கை படும் பாடு….. மருத்துவ உதவிகளை அனுப்பும் இந்தியா….!!!!

101 வகையான மருந்துகள் மற்றும் மருத்துவ தளவாடங்கள் அடங்கிய ஒரு தொகுப்பு இந்திய கடற்படை கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி, மருந்துகள் மற்றும் மருத்துவ தளவாடங்கள் இல்லாமல் மருத்துவமனைகள் முடங்கி கிடக்கின்றன. இந்நிலையில் இந்தியா, இலங்கைக்கு மருத்துவ தளவாடங்கள் மற்றும் மருந்துகளை அனுப்பி வைக்க  முடிவு செய்துள்ளது. மேலும் இந்த தகவலை ,இலங்கையின் சுகாதார மந்திரி சன்ன ஜெயசுமனா உறுதி செய்துள்ளார்.

இதையடுத்து 101 வகையான மருந்துகள் மற்றும் மருத்துவ தளவாடங்கள் அடங்கிய ஒரு தொகுப்பானது, இந்திய கடற்படை கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட உள்ளது. எனவே இந்த தொகுப்பு வருகிற 27-ந் தேதி அன்று  இலங்கையை வந்தடையும் என்று அவர் தெரிவித்துள்ளார்.மேலும் இந்தியாவைப்போல, இந்தோனேஷியாவும் 34 கோடி இலங்கை ரூபாய் மதிப்பிலான அத்தியாவசிய மருந்துகளை அனுப்ப உள்ளது. அதுவும் அந்த மருந்துகள் இன்னும் ஒரு வாரத்துக்குள் இலங்கை வந்தடையும். இவ்வாறு  அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |