Categories
தேசிய செய்திகள்

பெரும் சோகம்… காதல் விவகாரத்தில் சிறுமி கவுரவ கொலை…. தந்தை, சகோதரர் கைது…!!!!!!

உத்திரபிரதேசத்தில் காதல் விவகாரம் தொடர்பாக சிறுமியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பாண்டா மாவட்டத்தில்  குர்கா காலா என்னும்  கிராமம் அமைந்துள்ளது. அந்த கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி அதே கிராமத்தை சேர்ந்த வாலிபரை காதலித்து வந்துள்ளார். ஆனால் சிறுமியின் குடும்பத்தினர் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று சிறுமியின் தந்தையும்,  சகோதரனும்  காதல் விவகாரம் தொடர்பாக சிறுமியை கண்டித்துள்ளனர். அப்போது சிறுமி அவர்களுடன் வாக்குவாதம் செய்ததாக தெரிகின்றது. இதனால்  ஆத்திரம் அடைந்த சிறுமியின் தந்தை மற்றும் சகோதரர் இருவரும் சேர்ந்து சிறுமியை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளனர். அதன் பின் சிறுமியின் உடலை வீட்டின் பின்புறம் உள்ள கால்நடை கொட்டகையில் புதைத்தனர்.
இது பற்றி அக்கம்பக்கத்தினர் அளித்த புகாரின்அடிப்படையில்  போலீசார் சிறுமியின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் சிறுமி கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டுள்ளது  உறுதியானது. இதனையடுத்து போலீசார் இந்த கவுரவ கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து சிறுமியின் தந்தை மற்றும் சகோதரரை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |