Categories
தேசிய செய்திகள்

போலீஸ் நிலையத்தில்…. பாஜக தலைவரை தாக்கிய சிவசேனா கட்சியினர்…. மும்பையில் பதற்றம்…!!!!!!!

மும்பையில் நேற்றிரவு போலீஸ் நிலையத்தில் பாஜக தலைவர் கிரித் சோமையா சிவசேனா கட்சியினரால் தாக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
மும்பையில் நேற்றிரவு போலீஸ் நிலையத்தில் போலீசார் முன்னிலையில் பாஜக தலைவர் கிரித் சோமையா சிவசேனா கட்சியினரால் தாக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. மராட்டிய மாநில எம்.எல்.ஏ ரவி ராணா மற்றும் அவரது மனைவியும் அமராவதி எம்பியுமான நவ்நீத் கவுர், நேற்று மாலை கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்  போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து இந்த சம்பவம் மற்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அவர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவர், தாராவி பகுதியிலிருந்து அவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கும் கர் போலீஸ் ஸ்டேசன் சென்று போராட்டம் நடத்த போகிறேன்.  “அவர்கள் இருவரையும் சந்திப்பேன், என்னை யார் தடுக்கிறார்கள் ஏன்று பார்ப்போம்” என்று தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, அந்த போலீஸ் ஸ்டேசன் வளாகத்தில் இந்த அசம்பாவிதம் நடந்ததாக தெரிகின்றது.பாஜக தலைவர் கிரித் சோமையா தான் தாக்கப்பட்டதாக  குற்றம் சாட்டியுள்ளார். ஏறக்குறைய 100 சேனா தொண்டர்கள் அவரைத் தாக்கினர் எனவும் அவர்கள் தன்னைக் கொல்ல விரும்பினர் என்றும் கூறியுள்ளார். போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார். ஆனால், அவரது புகார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது என்று போலீஸ் தர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இந்த தாக்குதல் சம்பவம் பற்றி   கிரித் சோமையா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது, “நான் அதிர்ச்சியடைந்தேன், 50 காவலர்கள் முன்னிலையில், கர் காவல் நிலைய வளாகத்தில், சிவசேனாவின் 100 தொண்டர்கள் என்னை கற்களால் தாக்கினர், அவர்கள் என்னைக் கொல்ல விரும்பினர். இத்தனை மாபியா சேனா கட்சியின்  ரவுடிகள் காவல்நிலையத்தில் கூடுவதற்கு போலீஸ் அனுமதித்தது எப்படி? போலீஸ் கமிஷனர் என்ன செய்கிறார்? உத்தவ் தாக்கரேவின் ரவுடிகள் என்னை கொல்ல முயற்சிப்பது இது 3வது முறையாகும்” என்று ஆவேசமாக கூறியுள்ளார்.

Categories

Tech |