திண்டுக்கல் மாநகராட்சியில் நேற்று தூய்மைப்பணி முகமானது நடைபெற்றது.
தமிழகத்தில் உள்ள மாநகராட்சி பகுதிகளில் சுத்தமான மற்றும் பசுமையான சுற்றுச் சூழலை உருவாக்கும் பணியை பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஒத்துழைப்புடன் தூய்மை பணி முகாம் நடத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டிருக்கிறது. இது ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமை மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் பெயரில் திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் தூய்மை பணி முகமானது நேற்று நடைபெற்றது.
இந்த முகமானது, மாநகராட்சி 1-வது வார்டு பி.வி.தாஸ் காலனி, 3-வது வார்டு ஆர்.எம்.காலனி 80 அடி ரோடு, 8-வது வார்டில் நாயக்கர் புதுத்தெரு 1,2,3 சந்துகள், 12-வது வார்டு கோபாலசமுத்திரக்கரை, 13-வது வார்டு ஜோசப் காலனி, 23-வது வார்டு ஆர்.வி.நகர், 24-வது வார்டு மதுரை ரோடு, 28-வது வார்டு ஆக்னேஸ்மேரி தெரு, 30-வது வார்டு நாகல் புதூர் 1,2,3 சந்துகள், 32-வது வார்டு எழில்நகர், 39-வது வார்டு நத்தர்ஷா தெரு, 41-வது வார்டு பாஸ்கா மைதானம், பாவனச்சாவடி, 43-வது வார்டு வேடப்பட்டி விரிவாக்க பகுதி, 47-வது வார்டு கலைஞர்நகர், பாரதிபுரம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் ஆகியோர் தூய்மைப் பணியில் ஈடுபட்டார்கள். இந்த முகாமிற்கு மாநகராட்சி கமிஷனர் சிவசுப்ரமனியன் மேற்பார்வையிட்டார்.