Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வீடுகளை சீரமைத்து தரக்கோரி… பொதுமக்கள் முற்றுகை…!!!

கெங்கவல்லி ஒன்றிய அலுவலகத்தில் வீடுகளை சீரமைத்து தர கோரி பொதுமக்கள் முற்றுகையிட்டார்கள்.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகில் சமத்துவபுரத்தில் உள்ள வீடுகளில் கடந்த இரண்டு வருடங்களாக மழை பெய்யும் போது கசிவு ஏற்படுகிறது. இந்த வீடுகளில் வசித்து வரும் பொதுமக்கள் பலமுறை மனு கொடுத்தும், வீடுகளை சீரமைத்து கொடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் வீடுகளை சீரமைத்து தர வேண்டும் என்று கோரி நேற்று கெங்கவல்லி ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகையிட்டார்கள். அதன்பின் அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, வீடுகளை சீரமைத்து தருவதாக உறுதி கொடுத்தனர். இதனை அடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து வீட்டிற்கு சென்றுவிட்டார்கள்.

Categories

Tech |