ரூ 5 லட்சம் கடன் கொடுப்பதாக கூறி வாலிபரிடம் ரூ 73,000 அபேஸ் செய்தது தொடர்பாக சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டம், இடங்கணசாலை பகுதியில் வசித்து வருபவர் சக்திவேல்(32). இவருடைய செல்போனிற்கு கடந்த மாதம் நிதி நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறி ஒரு மர்ம நபர் பேசியுள்ளார். அப்போது அவர் தங்கள் நிதி நிறுவனத்தில் ரூபாய் 5 லட்சம் வரை கடன் கொடுப்பதாகவும், அதற்கு ஆவண செலவுக்கு பணம் செலுத்த வேண்டும் என்று சக்திவேலிடம் கூறினார்.
இதை உண்மை என்று நம்பிய சக்திவேல் 9 கட்டமாக ரூ 73,000 -த்தை அந்த மர்ம நபர் சொல்லிய வங்கிக் கணக்கிற்கு அனுப்பி உள்ளார். அதன்பின் அந்த மர்ம நபர் எந்த கடனும் வாங்கி கொடுக்கவில்லை. இதுகுறித்து சக்திவேல் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.