Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொடைக்கானலில் கனமழை… “வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு”…!!!

கனமழை காரணமாக வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் சில தினங்களாக கனமழை பெய்து வருகின்றது. சில தினங்களுக்கு முன்பாக பெய்த கனமழையின் போது தர்மபுரம் பகுதியில் உயர்மின் அழுத்த கம்பிகள் உரசியதால் 25க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த மின்சாதன பொருட்கள் சேதம் அடைந்தது. இதனால் அங்கு மின் வினியோகம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினமும் காலையில் லேசான மழை பெய்தது.

மதியம் வெயில் அதிகமாக இருந்தத நிலையில் மாலை 4 மணிக்கு கனமழை பெய்யத் தொடங்கி இரண்டு மணி நேரம் இடி மின்னலுடன் பெய்தது. இதனால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் நட்சத்திர ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறி வருவதால் வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. விடுமுறை நாட்கள் என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. இதனால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நேற்று முன்தினம் அப்சர்வேட்டரியில் இரவு 8 மணி வரை 40மிமீ போட்கிளப்பில் 47மிமீ மழை அளவானது பதிவானது.

Categories

Tech |