வலிமை படத்திற்குப் பிறகு அஜித் மற்றும் எச். வினோத் இயக்கத்தில் மீண்டும் ஒரு படம் உருவாகி வருகிறது. வலிமை படத்தின் வெற்றியால் இருவரும் மீண்டும் இணையும் புதிய படம் தொடர்பான செய்திகள் ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி வருகின்றது. இந்த படத்திற்கு இன்னும் பெயரிடவில்லை. தற்காலிகமாக ஏகே 61 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ள நிலையில் அஜித் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இப்படத்திற்கான பூஜை கடந்த வாரம் நடந்தது. இந்த கதை ஒரு கொலை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் இப்படத்தில் அஜித்துடன் மோகன்லால் நடிக்க உள்ளதாக செய்தி வெளியாகிறது. ஆனால் உண்மையில் அவர் இப்படத்தில் நடிக்கிறாரா என்பது குறித்து படக்குழுவினர் எதுவும் தெரிவிக்கவில்லை. கமல்ஹாசன், விஜய், சூர்யா ஆகியோரின் படங்களிலும் அவர் நடித்துள்ளார். தற்போது அஜித்துடன் மோகன்லால் நடித்து வருகிறார் என்பது தெளிவாக தெரியவில்லை .