Categories
அரசியல்

ஆடம்பர செலவு தேவையா?…. அமைச்சர் செந்தில் பாலாஜியை சீண்டிய அண்ணாமலை…..!!!!

தமிழக முதல்வர் ஆடம்பர செலவு செய்துள்ளதாக பா.ஜ.க அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் தி.மு.க ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு என அறிவித்தது. அதன்படி ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மின் இணைப்பு பெற்ற விவசாயிகளுடன் தமிழக முதல்வர் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். அந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மாநிலம் முழுவதும் உள்ள ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். தற்போது இந்த காணொளி காட்சி மூலம் கலந்துரையாடி நிகழ்ச்சிக்காக செலவிடப்பட்ட தொகை குறித்த ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியை வழங்கிய தமிழ்நாடு எல்காட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட தொகை குறித்து மின் நிறுவனம் மற்றும் பகிர்மான கழகத்தின் நிர்வாக இயக்குனர் அறிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சிக்காக மொத்தம் 2 கோடியே 70 லட்சத்து 36 ஆயிரத்து 762 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனம் கடனில் சிக்கித் தவிக்கும் நிலையில் இவ்வளவு பெரிய தொகையை செலவு செய்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. தற்போது பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மக்களின் வரி பணத்தை யாரோ ஒருவரின் கஜானாவுக்கு நிரப்புவதற்காகவே இந்த அரசு முனைப்புடன் செயல்பட்டு வருவதாக கூறியுள்ளார். அதாவது தமிழக மின்வாரியம் 1.5 கோடி கடனில் சிக்கி தவிக்கும் நிலையில் மின் வாரியத்தை மீட்டெடுக்க தமிழக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கு பதிலாக ஆடம்பர செலவுகளை மட்டுமே செய்து Tangedco பலவீனமாக்குகிறது.

ஒரு எளிய காணொளி சந்திப்பிற்கு Tangedco ரூபாய் 2.7 கோடி செலவழித்துள்ளது. இதனையடுத்து மின் உற்பத்தியாளர்கள், தனியார் மின் விநியோகஸ்தர்கள், கேஸ் இந்தியா நிறுவனத்திற்கு Tangedco செலவு செய்ய வேண்டிய தொகை அதிக அளவில் இருக்கிறது. ஆனால் அதற்கு பதிலாக இந்த அரசு தனிநபரின் கஜானாவை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மட்டுமே ஈடுபட்டு வருகிறது என அண்ணாமலை ட்விட்டர் தனது பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு முன்பும் மின்சாரத்துறை அமைச்சரை பா.ஜ.க அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

 

அதாவது பி.ஜி.ஆர் எனர்ஜி நிறுவனத்திடம் இருந்து எண்ணூர் அனல்மின் நிலைய திட்ட விரிவாக்கத்திற்கு முறைகேடாக 4,472 கோடி மதிப்பில் தமிழக அரசு முறைகேடு செய்துள்ளதாகவும், இதற்கு தி.மு.க அரசுக்கு தொடர்பு இருப்பதாகவும் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அண்ணாமலையின் இந்த குற்றங்களுக்கு தமிழக மின்சாரத்துறை அமைச்சர் மற்றும் பி. ஜி.ஆர் எனர்ஜி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |