தமிழக அரசு, மத்திய அரசு கொண்டுவந்துள்ள தொழிலாளர் நல சட்டங்களை ஏற்கக் கூடாது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து நேற்று முன்தினம் சேலம் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் பரமசிவம், மாவட்ட பொதுச் செயலாளர் முனுசாமி, பொருளாளர் சம்பத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மோகன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
மாவட்ட தலைவர் முருகன் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி அனைவரும் கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கட்டுமான உடலுழைப்பு நல வாரியங்களை பாதுகாக்க வேண்டும், தமிழக அரசின் கொள்கைகளுக்கு விரோதமாக மாநில தொழிலாளர் துறை மத்திய அரசின் சட்டங்களை அமல்படுத்துவதை கட்டுப்படுத்த வேண்டும் என பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.