கொரோனா நோய் தொற்றால் ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீன நாட்டில் ஷாங்காய் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் கொரோனா நோய்த் தொற்று பாதித்த 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கொரோனா நோய் தொற்று பரிசோதனை மேற்கொள்ள வருமாறு பொதுமக்களுக்கு அதிகாரிகள் தகவல் அனுப்பியுள்ளனர். இந்த கொரோனா பொது ஊரடங்கால் ஷாங்காய் நகர சாலைகள் மக்கள் நடமாட்டம் இன்றி காணப்படுகின்றன.
இதனை அடுத்து இருசக்கர வாகனங்களில் பெட்டிகளை ஏற்றி சென்று கொண்டிருந்த ஒரு சிலர் பிபிஇ கிட் அணிந்திருந்தார்கள். மேலும் அவர்கள் அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்பவர்களாக இருந்தனர். குறிப்பாக இந்த நகரத்தில் புதிதாக 20 ஆயிரத்து 634 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.