உக்ரைன் நாட்டின் அதிபரான ஜெலன்ஸ்கி போரை முடிக்கலாம் எனவும் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாகவும் ரஷ்ய அதிபரை மீண்டும் அழைத்திருக்கிறார்.
ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்க தொடங்கி இரண்டு மாதங்கள் ஆகிறது. உலக நாடுகள் இந்த போரை கைவிடுமாறு கேட்டுக் கொண்டிருக்கின்றன. எனினும் ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதனிடையே உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் குறித்த பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனினும், தற்போது வரை சுமுகமான தீர்வு கிடைக்கவில்லை. எனவே, போரை நிறுத்துவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று தெரிவித்ததாவது, இந்த போரை நிறுத்த வேண்டும் என்றும் தொடக்கத்திலிருந்தே ரஷ்ய ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் நான் தெரிவித்துக் கொண்டிருக்கிறேன்.
போரை முடிப்பதற்காக தான் அவரை சந்திக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் அவரை சந்திக்க கூடிய எண்ணம் எனக்கு இல்லை. ஏனெனில் எங்களின் நட்பு நாடுகள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம். ஆனால் ரஷ்ய நாட்டின் மீது நம்பிக்கை எங்களுக்கு கிடையாது. மோசமான சூழ்நிலையை எதிர்கொண்டிருக்கும் மக்களை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்று எண்ணுகிறேன். எனவே தான் பேச்சுவார்த்தை மேற்கொள்ள தயார் என்று கூறியிருக்கிறார்.