கனட நாட்டில் Red Earth Cree Nation என்ற பூர்வக்குடியின பகுதியைச் சேர்ந்த Frank Young என்ற 5 வயது சிறுவன் கடந்த செவ்வய்க்கிழமை அன்று மாயமானார். அதாவது Carrot River எனும் நதியின் அருகில் தனது வீட்டின் முன் அமைந்துள்ள புல்வெளியில் விளையாடிருந்த சிறுவன் காணாமல் போயுள்ளார். இதனால் Saskatchewan மற்றும் மனித்தோபாவில் உள்ள மக்கள் உட்பட 9 தன்னார்வலர்கள் குழுக்கள் Frankஐத் தேடி வருகின்றனர்.
எனினும் Frank காணாமல்போய் 4 நாட்கள் ஆகிவிட்ட சூழ்நிலையில், அவரை கண்டுபிடிக்க கூடுதல் தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. Frank காணாமல் போனதைத் அடுத்து கவலையிலும், அதிர்ச்சியிலும் ஆழ்ந்திருக்கும் அவனது பெற்றோருக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கனேடிய போலீசாரான Sgt. Richard Tonge கூறியதாவது, ஆகாய மார்க்கமாகவும், தண்ணீர் மற்றும் நில மார்க்கமாகவும் Frankஐத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் அவனையோ, அவனது உடைமைகள் எதையும் கூடவோ கண்டுபிடிக்க முடியவில்லை. அத்துடன் Frank கடத்தப்பட்டதற்கான அறிகுறிகளும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார். ஆகவே Frankஐத் தேடும் பணி தொடர்கிறது.