Categories
அரசியல்

தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பத்துறை….. விவசாயத்தில் ஆற்றும் பங்கு….!!!!

தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில் நுட்பங்களை தொழில்நுட்பங்களின் கூடை என அழைக்கலாம். இன்றைய காலகட்டத்தில் செல்போன்கள் என்பது அனைவரது வாழ்க்கையிலும் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. இவை சேமித்தல், தகவல்களை பரப்புதல், தகவல்களை செயலாக்குதல், தொடர்பு கொள்ளுதல் போன்ற பல்வேறு செயல்களுக்கு துணை புரிகிறது. குறிப்பாக விவசாயத்திற்கு தகவல் தொழில்நுட்பங்கள் இந்தியா போன்ற நாட்டில் முக்கிய பங்காற்றுகிறது.

அதாவது விவசாயத்தில் தகவல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் திறன் மிகவும் அவசியமான ஒன்றாகும். மின் வேளாண்மை என்பது கிராமப்புறங்களில் தொழில்நுட்ப ரீதியாக விவசாயத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு துறையாகும். இந்தத் துறை தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் மூலமாக பயன்பாடு, மதிப்பீடு, மேம்பாடு, புதுமையான வழிகளின் வடிவமைப்பு போன்றவற்றை உள்ளடக்கியதாகும். இது விவசாயத்தில் புதிய அணுகுமுறைகளை கையாள்வதற்கும் உதவுகிறது.

அதன்பிறகு விவசாயத்தில் இயற்கை வளங்கள், மேம்பட்ட விவசாய தொழில்நுட்பங்கள், வங்கி மற்றும் நிதி சேவைக்கு சிறந்த அணுகு முறைகளை கையாளுதல், பயனுள்ள உற்பத்தி உத்திகள், சந்தைகள் போன்றவற்றிற்கு தகவல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை உதவுகிறது. இதன் மூலமாக கிராமப்புற மக்களை மேம்படுத்தலாம். இதனையடுத்து விவசாய உற்பத்தியில் வானிலை என்பது மிக அவசியமான ஒன்றாகும்.

ஏனெனில் வானிலை மாற்றங்களால் ஏற்படும் வெப்பம், மழை போன்ற பல்வேறு காரணங்களால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இது தொடர்பாக முன்கூட்டியே எச்சரிக்கை செய்தல் மற்றும் உள்ளூர் மயமாக்கல் வரை கண்டறிதல், முதல் முன்கணிப்பு போன்ற அனைத்து செயல்களிலும் தகவல் மற்றும் தகவல் தொடர்புத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்நிலையில் பகுப்பாய்வு, அளவீட்டு கண்டறிதல், அறிக்கையிடல் போன்றவைகளுக்கு கணிசமான செலவே ஆகிறது. ஆனால் இது வலுவான ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக இந்தியாவில் வசிக்கும் கிராமப்புற மக்களிடையே தகவல் மற்றும் தகவல் தொடர்புத் துறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது தொடர்பான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் சமூக வானொலி என்பது தகவல் மற்றும் தகவல் தொடர்பு துறையின் ஒரு முக்கிய கருவியாகும். இது விவசாயிகளுக்கும், மக்களுக்கும், சமூக வளர்ச்சிக்கும் உதவுகிறது. இன்றைய காலகட்டத்தில் செல்போன்கள் வயது வரம்பின்றி அனைவரும் பயன்படுத்தக்கூடிய ஒரு சாதனமாக மாறியுள்ளது ‌

Categories

Tech |