Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“எனக்கு வாடகை கொடு” வார்டு கவுன்சிலரின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வாலிபரை தாக்கிய வார்டு கவுன்சிலர் உள்ளிட்ட 8 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள சத்துவாச்சாரி பகுதியில்  வாசன் என்பவருக்கு சொந்தமாக வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டில் வேலூர் மாநகராட்சியின் 27-வது வார்டு தி.மு.க. கவுன்சிலரான சதீஷ்குமார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில்  சதீஷ்குமார் கடந்த சில மாதமாக வீட்டு வாடகை சரியாக செலுத்தவில்லை. இதனால்  நேற்று வாசன் தனது நண்பர் கண்ணன் உள்ளிட்ட சிலருடன்  சேர்ந்து சதீஷ்குமாரின் வீட்டிற்கு வாடகை கேட்க வந்துள்ளார்

அப்போது சதீஷ்குமார் வாசனிடம் தகராறு செய்து சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் கண்ணன்  படுகாயம் அடைந்துள்ளார். மேலும் இதுகுறித்து வாசன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் சதீஷ்குமார், அவரது அக்கா கனிமொழி, தாய் பத்மாவதி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |