பூங்காவில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் மாநகராட்சியில் வேப்பமூடு பூங்கா அமைந்துள்ளது. இங்கு தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். இந்த பூங்காவில் துப்புரவு பணியாளர்கள் தினமும் தூய்மைப் பணியை மேற்கொள்கின்றனர். அதுபோக மாதந்தோறும் சிறப்பு தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படும். இங்கு மாதாந்திர தூய்மை பணிகள் நடந்து கொண்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் மகேஷ் கலந்து கொண்டார். இவர் தூய்மை பணியாளர்களுடன் சேர்ந்து துப்புரவு பணியை மேற்கொண்டார். இவருடன் சேர்ந்து மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், மாநகர நல அதிகாரி விஜய் சந்திரன் உள்பட சில அதிகாரிகளும் துப்புரவு பணியை செய்தனர்.
இதனையடுத்து அண்ணா பேருந்து நிலையத்தில் மேயர் ஆய்வு செய்தார். அந்த ஆய்வின் போது பராமரிப்பில்லாத நீர்த்தேக்கத் தொட்டியை தொட்டியை உடனடியாக தூய்மைப்படுத்த உத்தரவிட்டார். அதன்பிறகு தாய்மார்கள் பாலூட்டும் அறை, கட்டண கழிவறை போன்றவற்றை ஆய்வு செய்து அதை சுத்தமாக வைத்திருக்குமாறு கூறினார். அதன்பின் பேருந்து நிலையங்களில் இருந்த கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது சில கடை உரிமையாளர்கள் பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் விதமாக கூடுதல் இடங்களை ஆக்கிரமித்து இருந்தனர். உடனே மேயர் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு உத்தரவிட்டார்.