Categories
சினிமா தமிழ் சினிமா

செம…. லாஸ்லியா நடிக்கும் ”கூகுள் குட்டப்பா” திரைப்படம்….. ரிலீஸ் தேதி அறிவிப்பு….!!!

”கூகுள் குட்டப்பா” படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இயக்குனர் சபரி இயக்கத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான லாஸ்லியா மற்றும் தர்ஷன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ”கூகுள் குட்டப்பா”. இந்த படத்திலேயே கே.எஸ். ரவிக்குமார் மற்றும் குளோபல் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தில் கே.எஸ். ரவிக்குமார், யோகி பாபு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

வெளியானது கூகுள் குட்டப்பா படத்தின் டீஸர் | Koogle Kuttapa Teaser released  | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online |  Tamilnadu News

ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றது. இந்நிலையில், ”கூகுள் குட்டப்பா” படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி, இந்த படம் வரும் மே 6ஆம் தேதி திரையரங்கில் ரிலீசாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Categories

Tech |