கிராவல் மண் கடத்தியவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தை சேர்ந்த அதிகாரிகள் மூன்றுமாவடி மெயின் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 3 டிப்பர் லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சட்டத்திற்குப் புறம்பாக மூன்றுமாவடி அய்யாவுதேவர் நகரிலிருந்து கிராவல் மண் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் திருப்பாலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் அந்த 3 லாரியையும் பறிமுதல் செய்து, உரிமையாளர், ஓட்டுநர் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.