தீவிர சிகிச்சை பிரிவு தொடக்கவிழா நடைபெற்றுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் அரசு மருத்துவமனையில் 17 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 8 படுக்கைகளுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவு தொடக்க விழா நடைபெற்றது. இதில் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் எம். கண்ணகி, உதவி கலெக்டர் எஸ், தனஞ்செயன், துணை தலைவர் பூங்கொடி மூர்த்தி, நகர்மன்ற உறுப்பினர் த.புவியரசி, கே. வி.கோபாலகிருஷ்ணன், சுமதி மகாலிங்கம், என்.கோவிந்தராஜ், மனோஜ், நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கதிர் ஆனந்த், மருத்துவர் கார்த்திகேயன், ஆர்.ஹேமலதா, எஸ். மஞ்சுநாத், செவிலியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் விழாவை தொடங்கி வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் மின் தடைக்கான காரணம் குறித்து தமிழக மின்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். ஏனென்றால் பல்வேறு இடங்களில் தொழில்நுட்ப குறைபாடு, மின்மாற்றி பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெறுவதால் மின்தடை ஏற்படுகிறது. மேலும் இந்தியா முழுவதும் 10 நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே இருக்கிறது. இதனால் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மின் பிரச்சினையை சமாளிக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.