வேனில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி அனைத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மதுக்கூர் கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வேன் தீ பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை பார்த்து சக்திவேல் உடனடியாக வேனை நிறுத்தி விட்டார். இதனையடுத்து வேனில் இருந்த9 பேரும் கீழே இறங்கியுள்ளனர்
இதுகுறித்து பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி வேனில் பற்றி எரிந்த தீயை அனைத்துள்ளனர். இந்த விபத்தில் வேன் முழுவதும் எரிந்து நாசமாகியுள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.