Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“கொழுந்துவிட்டு எரிந்த தொழிற்சாலை” பொதுமக்கள் அளித்த தகவல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தீப்பெட்டி தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி அனைத்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் தங்கம் நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான தீப்பெட்டி தொழிற்சாலை ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்த ஆலையில் 100-க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று தொழிலாளர்கள் வேலையை முடித்து விட்டு  வீட்டிற்கு சென்றுவிட்டனர். இதனையடுத்து இரவு 8 மணி அளவில் தீப்பெட்டி தொழிற்சாலை திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அனைத்துள்ளனர். இந்த விபத்தில் தொழிற்சாலையில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது. இதனை உதவி ஆட்சியர் தனஞ்செயன், சட்டமன்ற உறுப்பினர் விஜயன், நகர்மன்ற தலைவர் எஸ். சவுந்தரராஜன், இன்ஸ்பெக்டர் லட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று தொழிற்சாலையில் ஆய்வு செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |