இலங்கையில் விலையேற்றம் உட்பட பொருளாதார சீர்கேடுகளை எதிர்த்து அதிகமான மக்கள் திரண்டு முல்லைத்தீவில் ஊர்வலமாக சென்றிருக்கிறார்கள்.
இலங்கையில் ஏற்பட்டிருக்கும் நிதி நெருக்கடி மற்றும் விலையேற்றத்திற்கு எதிராக நாடு முழுக்க போராட்டம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் தங்களின் கண்டன போராட்டத்தை மக்கள் ஆரம்பித்தனர்.
போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு அரசாங்கத்திற்கு எதிராக முழக்கமிட்டனர். அந்த சமயத்தில் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக ஆட்டோ ஓட்டுநர்களும் கலந்துகொண்டு ஊர்வலம் சென்றிருக்கிறார்கள்.
அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்திருப்பதற்கு எதிராகவும், மாயமாக்கப்பட்டோருக்கு பதில் வேண்டும் எனவும் எழுதப்பட்ட பதாகைகளை வைத்துக்கொண்டு முழக்கங்கள் எழுப்பியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மதகுருமார்கள், வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சரான சிவனேசன் போன்ற பலர் பங்கேற்று ஊர்வலம் சென்றிருக்கிறார்கள்.