Categories
தேசிய செய்திகள்

“மனதின் குரல் நிகழ்ச்சி”…. அதிகரித்த டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை…. பிரதமர் மோடி…..!!!!!

பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியானது தொடங்கியது. இதில் முன்னாள் பிரதமர்களுக்கான அருங்காட்சியகத்தின் சிறப்பம்சம் தொடர்பாக பிரதமர் மோடி உரை ஆற்றினார். அதுமட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது “கோடை வெயில் அதிகரித்து வரும் சூழ்நிலையில் நாம் நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். தண்ணீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படுபவர்கள் தொடர்பாக நாம் சிந்திக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பல துறைகளில் சாதனை புரிந்து வருகின்றனர். மார்ச்மாதத்தில் ரூபாய் 10 லட்சம் கோடி வரை யூபிஐ டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நடந்துள்ளது.

தினசரி ரூபாய் 20 ஆயிரம்கோடி ஆன்லைன் பரிவர்த்தனைகள் நடைபெறுகிறது. சிறிய உணவகங்கள்மற்றும் பழக் கடைகளில்கூட டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செயல்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக பணத்தை எடுத்துச் செல்லவோ (அல்லது) ஏடிஎம்மை தேடி அலையவோ இனிமேல் தேவையில்லை. ஒருநாள் முழுதும் கையில் காசு எடுத்துச் செல்லாமல் டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாக பணம் செலுத்தி முடியும். ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தாமல் ஒருநாள் முழுதும் டிஜிட்டல் பரிவர்த்தனை அனுபவத்தை உணரவேண்டும். தொழில் நுட்பத்தின் சக்கி ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது” அவர் குறிப்பட்டிருந்தார்.

Categories

Tech |