இலங்கை நாட்டில் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி அதிகரிப்பைகண்டித்து நாடு முழுதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதாவது அதிபர் கோந்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவிவிலக வேண்டுமென்று போராட்டக்காரர்கள், எதிர்கட்சியினர் வலியுறுத்தி வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் இடைக்கால அரசு அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகிறது. ஆனால் அதிபர் பதவியிலிருந்து விலகமாட்டேன் என கோத்தப யராஜபக்சே அறிவித்துவிட்டார். பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவியிலிருந்து விலகலாம் என சில நாட்களாக தகவல் வெளியானபடி இருந்தது. இந்தநிலையில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன் என்று மகிந்த ராஜபக்சே அறிவித்து உள்ளார்.
மாறுபட்ட கொள்கைகளை கொண்டவர்கள் நேருக்கு நேராக பார்த்துக்கொள்ள முடியாதபோது இதுபோன்ற அரசியல் அமைப்புகளால் (இடைக்கால அரசாங்கம்) எந்த பயனுமில்லை. நான் பிரதமர் பதவியிலிருந்து விலக மாட்டேன். ஒருவேளை இடைக்கால அரசாங்கம் அமைந்தாலும் நானே தலைவராக இருப்பேன். நாட்டில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. எனினும் தீர்வுகாண பேச்சு வார்த்தைக்கு அவர்கள் வரவில்லை. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் பேச்சுவார்த்தைக்கு வராதவரை போராட்டங்கள் தொடரவே செய்யும்.