திடீரென அனைத்து கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டையில் ஆஞ்சநேயர் சிலை ஒன்று அமைந்துள்ளது. இங்கு அனைத்து கட்சியினர் சார்பாக போராட்டம் நடைபெற்றது. இவர்கள் மணலூர்பேட்டையை தாலுகாவாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டத்தில் பா.ஜ.க நிர்வாகிகள் செந்தில், சேகர், வெங்கடேசன், கோவிந்தன், தே.மு.தி.க நிர்வாகிகள் ரமேஷ், கருணாகரன், பா.ம.க நிர்வாகிகள் விஸ்வநாதன், மணிகண்டன், அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் துரைராஜ் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.