உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ரஷ்யா பயன்படுத்திய போர் ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்கள் ஜெர்மனி மற்றும் பிரான்ஸில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் நடத்திய ஆய்வில் இந்த உண்மை தெரியவந்துள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்து கிரிமியா பகுதி தங்களுக்கு சொந்தம் என உரிமை கொண்டாடியது. இதனையடுத்து ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்ய ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்திருந்தது. ஆனால் ஜெர்மனி பிரான்ஸ் மற்றும் இத்தாலி உள்ளிட்ட 10 நாடுகள் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க தேவையான ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்களை வழங்கியுள்ளது அதிகாரிகளின் ஆய்வில் தெரியவந்துள்ளது.