ஆற்றில் மூழ்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூரில் தென்பெண்ணை ஆறு அமைந்துள்ளது. இந்த ஆற்றில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்துள்ளார். இதைப்பார்த்த சிலர் திருக்கோவிலூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஆற்றில் கிடந்த பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கரீம் பாஷா என்பது தெரியவந்தது. இவர் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பள்ளி வாசல்களில் பணம் வசூலிப்பதற்காக வந்துள்ளார். இவர் ஆற்றில் குளிப்பதற்காக சென்றபோது எதிர்பாராதவிதமாக ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது.