Categories
தேசிய செய்திகள்

I LOVE YOU….. என் மரணமே உன் திருமண பரிசு….. பெரும் சோகம்….!!!!

சத்தீஸ்கர் மாநிலம் பாலோட் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்தப் பெண்ணுக்கு சில நாட்களுக்கு முன்பு வேறு ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது. இதுபற்றி அறிந்த அந்த இளைஞன் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். மேலும் தனது நண்பர்களுடன் அழுது புலம்பி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவ தினத்தன்று அந்த இளைஞர் தனது வீட்டின் சுவரில் “என் மரணம் தான் உனக்கான திருமண பரிசு”… ஐ லவ் யூ  என எழுதி வைத்துள்ளார் .

மேலும் இதை தனது செல்போனில் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸாக வைத்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்பு காவல்துறையினருடன் அவரது வீட்டிற்கு வந்து பார்த்தபோது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தார். காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற்றதால் காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Categories

Tech |