Categories
அரசியல் தேசிய செய்திகள்

டெல்லி தேர்தல்: ஹேமா மாலினி, காம்பீர் என நட்சத்திரங்களைக் களமிறக்கிய பாஜக

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பரப்புரை மேற்கொள்ளவிருக்கும் நட்சத்திர பரப்புரையாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.

டெல்லியில் தற்போதைய அரசின் ஆட்சிக்காலம் முடியப்போவதால், அங்கு பிப்ரவரி 8ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அறிவித்த நாள் முதலே டெல்லி அரசியல் களத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி தொகுதியில் மூன்றாவது முறையாகப் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.

தேசியக் கட்சிகளான பாஜகவும் காங்கிரசும் தலைநகரின் சட்டப்பேரவையை கைப்பற்ற முனைப்பு காட்டிவருகின்றன. அதன்படி, அனைத்து தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டன.

பரப்புரையாளர்கள் பட்டியல்

வேட்புமனு தாக்கல் செய்த கையோடு இன்று அரவிந்த் கெஜ்ரிவால் தன்னுடைய தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார். இந்நிலையில், பாஜக கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் நட்சத்திரங்களின் பெயர் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது.

அப்பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரும் நடிகைகள் ஹேமா மாலினி, சன்னி தியோல் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் அப்பட்டியலில் கவுதம் காம்பீர், ரவி கிஷான், தினேஷ் லால் யாதவ், மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

Categories

Tech |