தோட்டத்திற்குள் புகுந்த பாம்பை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு காட்டுப்பகுதியில் விட்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி அருகே லாரன்ஸ்டன் பகுதியில் அன்புராஜ் என்பவருக்கு சொந்தமான ஒரு தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்தில் தொழிலாளர்கள் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஒரு மலைப்பாம்பு வந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் தோட்டத்தைவிட்டு அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
இதுகுறித்து ஓவேலி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் பாம்பை பத்திரமாக பிடித்தனர். அந்த மலைப்பாம்பு சுமார் 7 அடி நீளம் இருந்தது. அதன்பின் மலைப்பாம்பை வனத்துறையினர் காட்டுப்பகுதிக்குள் பத்திரமாக விட்டனர்.