மாணவர்களுக்கு புத்தக பயன் குறித்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பொக்காபுரம் பகுதியில் பழங்குடியினர் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களை மசினகுடியிலிருக்கும் நூலகத்திற்கு ஆசிரியர்கள் அழைத்துச் சென்றனர். அங்கு மாணவர்கள் பல்வேறு புத்தகங்களை அமர்ந்து படித்தனர். அதன்பிறகு புத்தகத்தின் பயன் மற்றும் படிப்பதன் அவசியம் குறித்து மாணவர்களுக்கு விளக்களிக்கப்பட்டது.