குடியரசு தினத்தையொட்டி கலை நிகழ்ச்சிகள் பல நடந்து வரும் நிலையில் சென்னையில் பல்வேறு விருதுகளை வழங்கினார் முதல்வர் பழனிசாமி.
கோவை நகர காவல் நிலையத்திற்கு சிறந்த காவல் நிலையம் எனும் பதக்கத்தை முதல்வர் பழனிசாமி வழங்கினார்.
நாகை மாவட்டதீயணைப்பு வாகன ஓட்டுநர் ராஜாவிற்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தையை மீட்டதை பாராட்டி வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம், முதல்வர் பழனிசாமி வழங்கினார். இதே போன்று பெண்ணை கடத்திய ஆட்டோவை துரத்தி பிடித்த இறந்த மற்றும் காயமடைந்த இளைஞர்களுக்கும் வீர தீர விருதை வழங்கினார்.
திருச்சியில் மத நல்லிணக்கத்திற்காக பாடுபடும் ஷாஜ முஹமதிற்கு கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம் வழங்கினார் முதல்வர்.
திருந்திய நெல்சாகுபடியை கடைபிடித்து அதிக உற்பத்தி திறன் பெற்ற யுவக்குமார்க்கு வேளாண் துறையின் சிறப்பு விருது வழங்கினார் முதல்வர்.
பதக்கம் விருது பெற்றவர்களுடன் எடப்பாடி பழனிசாமி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.