விமானம் எவ்வளவுதான் பாதுகாப்பான முறையில் பறந்து சென்றாலும் கூட அதிலுள்ள பயணிகளும் விமானிகளும் அங்கு சொல்லக்கூடிய அதிகபட்சம் முதல் குறைந்தபட்சம் வரை உள்ள விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். குறிப்பாக விமானத்தை இயக்கும் விமானிகள் அனைவரும் தங்களது தாடியை ட்ரிம் அல்லது கிளீன் ஷேவ் பண்ணி இருப்பார்கள். இதற்கான காரணம் என்னவென்றால், விமானத்தில் பயணம் செய்பவர்களின் பாதுகாப்பு எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு விமானியின் பாதுகாப்பும் முக்கியம்தானே.
ஒருவேளை விமானத்தில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் விமானி ஆக்சிஜன் மாஸ்கை பயன்படுத்த நேரிடும். அந்த சமயத்தில் விமானியின் முகத்தில் எந்தவித இடையூறும் இருக்கக்கூடாது. அதாவது விமானியின் முகத்தில் தாடி இருந்தால் ஆக்சிஜன் மாஸ்க் சரியாக பொருந்தாமல் அவருக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல் போகலாம். இது எத்தனை பெரிய ஆபத்தில் போய் முடியும் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. எனவே ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பொதுவாக விமானிகள் தங்களது தாடியை ட்ரிம் அல்லது கிளீன் ஷேவ் பண்ணி இருக்க வேண்டும் என்ற விதிமுறையை கண்டிப்பாக கடைபிடிக்கின்றனர்.