Categories
பல்சுவை

பல வருட ரகசியம்…. சாதாரண மனிதனை விட 17% அதிகம்….. வியப்பூட்டும் ஐன்ஸ்டின் மூளை….!!!

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மார்ச் 14, 1879 ஆண்டு பிறந்தவர்.  அறிவியல் உலகில் எண்ணற்ற விஞ்ஞானிகள் தோன்றியிருந்தாலும் அவர்களில் முதன்மையானவராக, ‘அறிவாளி’ என்பதற்கு உதாரணமாக ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தான் அடையாளப்படுத்தப்படுகிறார். இளமைக்காலத்தில், மற்ற விஞ்ஞானிகளைப் போல ஆராய்ச்சிக்கூடங்களில் பணியாற்ற வாய்ப்பின்றி, எண்ண ஓட்டங்களிலேயே ஆராய்ச்சி செய்து வழிக் கண்டவர். இருபதாம் நூற்றாண்டின் மகத்தான அறிவியல் அறிஞர். அவரது சார்பியல் கோட்பாடு, இயற்பியலில் புதிய கோணத்திற்கு கொண்டு சென்றது. அதுவரை கோலாச்சியிருந்த ஐசக் நியூட்டனின் கோட்பாடுகளில் புதைந்திருந்த முரண்பாடுகளைத் தகர்த்தெடுத்து அறிவியலில் புதிய தளத்திற்கு கொண்டுச் சென்றது.

இவர் ஏப்ரல் 18, 1955 அன்று இறந்தார். 1955 ஆம் ஆண்டு இவர் இறந்த பிறகு ஒரு விஞ்ஞானி இவரது மூளையைத் திருடி விடுகிறார். பின்னர் இவரது மூளையை சிறு சிறு துண்டுகளாக வெட்டி ஆய்வு செய்ய ஆரம்பிக்கிறார். 40 ஆண்டுகளாக ஒரு திரவியத்தில் துண்டுகளாக வெட்டப்பட்ட ஐன்ஸ்டீன் மூளையை போட்டு வைத்து ஆய்வு மேற்கொண்டு வந்துள்ளார். 40 வருடத்திற்கு பிறகு தான் இந்த சம்பவம் வெளியில் தெரியவருகிறது. பின்னர் இந்த மூளையை தலைசிறந்த விஞ்ஞானியிடம் கொடுத்து ஆய்வு மேற்கொள்ளப் சொல்கிறார்.

ஐன்ஸ்டீனின் மூளையை ஆய்வு செய்யும் பொழுது ஆய்வாளர்கள் அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கினர். ஏனெனில் சாதாரண மனிதர்களை காட்டிலும் ஐன்ஸ்டீன் மூளையில் 17% நியூரான் அதிக அளவில் இருந்துள்ளது. மேலும் மனிதர்களுக்கு parietal operculum என்ற பகுதி இருக்கும். ஆனால் ஐன்ஸ்டீன் மூளையில் இது இல்லை.  இதற்கு பதிலாக parietal lobe என்ற பகுதி இவரது மூளையில் 20 சதவீதம் அதிக அளவில் இருந்தது. இதனால் தான் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கணக்கு திறமையும், கற்பனை சக்தியும் அதிக அளவில் இருந்துள்ளது.

Categories

Tech |