Categories
அரசியல்

பெண்களே….! சுயமாய் சம்பாதிக்க ஆசையா….! உங்களுக்கான சூப்பர் திட்டம் இதோ….!!!

பெண்கள் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் பல்வேறு கடன் திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றது. அதிலும் பெண்களுக்காக, அவர்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு முயற்சிகள் மற்றும் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய அரசு பெண்கள் மேம்பாட்டு கழகத்தின் கீழ் உத்யோகினி என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் மூலமாக ஏழை பெண்கள் தொழில் முனைவோருக்கு தொழில் தொடங்குவதற்கு நிதி உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள், பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெண்களுக்கு எந்தவித பாரபட்சமும் இல்லாமல் வட்டியில்லா கடன் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலமாக நாம் அதிகபட்சம் மூன்று லட்சம் வரை கடன் பெறலாம். சிறப்புப் பிரிவினருக்கு அதிக மானியம் அல்லது இலவச கடன் வசதிகள் உண்டு. இதில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குடும்ப வருமானம் ஆண்டுக்கு 1.5 லட்சம் மற்றும் அதற்கு குறைவாகத் தான் இருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 55 வயதுக்குள் இருக்க வேண்டும். விதவை, ஊனமுற்ற பெண்களுக்கு வருமான வரம்பு கிடையாது. வளர்ச்சியடையாத பகுதிகளில் உள்ள பெண்களின் தொழில்முனைவு திறனை ஊக்குவிப்பதற்காக இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:

  • ஆதார் அட்டை
  • பிறப்பு சான்றிதழ்
  • பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் -2
  • உள்ளூர் எம்எல்ஏ அல்லது உள்ளூர் எம்பிக்கு ஒரு கடிதம்
  • பிபிஎல் அட்டையின் நகல்
  • சாதி சான்றிதழ் (SC/ST)
  • வருமான ஆதாரம்
  • வங்கி பாஸ்புக்கின் புகைப்பட நகல்

இந்த திட்டத்தின் மூலமாக கடன்களுக்கான மானியத்தில் 30% வரை வழங்குவதன் மூலம் பெண்களுக்கு திருப்பி செலுத்துவது மலிவு செய்யப்படுகிறது.

Categories

Tech |