நம்முடைய வாழ்க்கையில் பல கெட்ட விஷயங்கள் நடந்திருக்கலாம். ஆனால் ஒரு சில நேரத்தில் கெட்ட விஷயங்களுக்கு பின்னால் ஒரு நல்லதும் நடந்திருக்கும். அப்படி தான் கலிபோர்னியாவுக்கு குடும்பத்தோடு வெக்கேஷன் சென்றிருந்த நபர் ஒருவருக்கு நடந்த விஷயம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதாவது அந்த நபர் கடலில் சுறாக்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த பலகையை கவனிக்காமல் மகிழ்ச்சியாக குடும்பத்தோடு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது ஏதோ ஒன்று அவர் மீது மோதிவிட்டு சென்றுள்ளது.
மேலும் அவருக்கு சிறிது நேரத்திலேயே ரத்தமும் வந்துள்ளது. இதையடுத்து அவருடைய மகள் முதுகில் ஏதோ ஒரு பெரிய காயம் இருப்பதாக அவரிடம் கூறியிருக்கிறார். ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்ல விரும்பவில்லை. அதன்பிறகு ஒருநாள் செய்தியில் ஒருவரை சுறாமீன் கடித்ததாக வெளியான தகவலை பார்க்கிறார். அப்போது தான் நம்மையும் சுறாமீன் தான் கடித்திருக்கும் என்பதை உணர்ந்த அந்த நபர் வெக்கேஷன் முடிந்ததும் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அங்கு அவருடைய ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்த மருத்துவர் சுறாமீன் கடித்ததால் எந்த பாதிப்பும் இல்லை தானாகவே காயம் சரியாகிவிடும் என்று கூறியிருக்கிறார். ஆனால் கிட்னியில் கட்டி இருப்பதாகவும், தற்போது 20% கிட்னி டேமேஜ் ஆகிவிட்டதாகவும் மருத்துவர் கூறியிருக்கிறார். மேலும் இதனை பார்க்காமல் விட்டிருந்தால் உயிருக்கே ஆபத்தாக முடிந்திருக்கும் என்றும் மருத்துவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் கெட்டதே நடந்தாலும் அதற்கு பின்னால் ஒரு நல்லது இருக்கும் என்பது நிரூபணமாகியுள்ளது.